×

அஞ்சால் அலுப்பு மருந்து என சாணி பவுடரை சாப்பிட்ட 10 ஆம் வகுப்பு மாணவி

 

அஞ்சால் அலுப்பு மருந்து என்று நினைத்து சாணி பவுடரை சாப்பிட்ட பத்தாம் வகுப்பு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் மாணவியின் உயிரை காப்பாற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அதிகாலை எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து தூக்க கலக்கத்திலேயே சென்று அஞ்சால் அலுப்பு மருந்து என்று நினைத்து அருகில் இருந்த சாணி பவுடரை சாப்பிட்டுள்ளார். இதனால் வாந்தி, மயக்கம் அடைந்த பள்ளி மாணவியை அவரது பெற்றோர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பள்ளி மாணவியை தீவிர சிகிச்சை அளித்த வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மாணவியின் உயிரை காப்பாற்றினர். மேலும் பள்ளி மாணவியின் பெற்றோரிடம் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதற்கு மற்றும் வீட்டு பாடங்களை செய்வதற்கு அருகாமையில் இருந்து உதவி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பள்ளி மாணவியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.