×

 அரையாண்டு தேர்வில்  குறைவான மார்க் எடுத்ததால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை 

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூனாண்டியூரில் அரையாண்டு தேர்வில்  குறைவான மார்க் எடுத்ததால் மனம் உடைந்த 9-ம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அருகே உள்ள கூனாண்டியூரை சேர்ந்தவர் லட்சுமணன் - சத்யா தம்பதியினர். இவருடைய மூத்த மகள் சோபிகா ஸ்ரீ  10-ம் வகுப்பும்,  இரண்டாவது மகள் தீபிகா ஸ்ரீ  9-ம் வகுப்பும் ,  மூன்றாவது மகன் இமயபாரதி 4-ம் வகுப்பும்   தனியார் பள்ளி ஒன்றில்  படித்து வருகின்றனர்.  நேற்று அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து குழந்தைகள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றன.  இரண்டாவது மகள் மாணவி  தீபிகா ஸ்ரீயும்  வழக்கம்போல்  பள்ளிக்கு சென்றார். பள்ளியில் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.  இதில் ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்  மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். 

இதனால் வீட்டுக்கு சென்ற மாணவி தீபிகா ஸ்ரீ நேற்று இரவு  அருகில் உள்ள ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து  தற்கொலை செய்து கொண்டார். மகளை காணாமல் துடித்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் மகள் திவ்யா ஸ்ரீ  கிணற்றில் குதித்ததாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார், மாணவியின் சடலத்தை கிணற்றில் இருந்து  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.