×

9ம் வகுப்பு மாணவி தற்கொலை - 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

 

வால்பாறை அருகே ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மூத்த மகள் முத்து சஞ்சனா ரெட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்.10 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி முத்து சஞ்சனா உடலில் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 3 ஆசியர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்தனர்.

இந்நிலையில் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.