ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9.9 ரிக்டர் எனத் தவறான எச்சரிக்கை விடுத்து பதறவைத்த ஜப்பான்!
ரஷ்யாவின் மிகக்கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்ப மண்டலத்தில் (Kamchatka Peninsula) ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் விவரங்கள்:
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 140 கிலோமீட்டர் (86.99 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரஷ்யாவின் விலியூச்சின்ஸ்க் (Vilyuchinsk) நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 123 கிலோமீட்டர் தொலைவில் இதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆபத்து எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி செய்துள்ளது. இத்தாக்குதலால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சொத்து சேதங்கள் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
ஜப்பான் வெளியிட்ட தவறான எச்சரிக்கையும் பரபரப்பும்:
இதனிடையே, ஜப்பான் வானிலை மையம் (JMA) தானியங்கி எச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக, 9.9 ரிக்டர் அளவில் மிகக் கொடூர நிலநடுக்கம் உருவாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் கடுமையான அதிர்வுகள் ஏற்படும் என்றும் அவசர எச்சரிக்கை விடுத்துப் பெரும் பீதியை ஏற்படுத்தியது. பின்னர் தங்களின் உண்மையான பதிவில் நிலநடுக்கத்தின் அளவு 6.9 ஆக மட்டுமே இருந்தது என்பதைக் கண்டறிந்து, அந்தப் பிழையான எச்சரிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஒருவேளை ஜப்பான் விடுத்த 9.9 ரிக்டர் எச்சரிக்கை உண்மையாக இருந்திருந்தால், அது உலக வரலாற்றிலேயே பதிவான மிக வலிமையான நிலநடுக்கமாக இருந்திருக்கும். இதுவரை உலகில் கருவிகளால் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம், 1960-ஆம் ஆண்டு சிலியின் வால்டிவியாவில் நிகழ்ந்த 9.5 ரிக்டர் நிலநடுக்கமாகும்.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகமுள்ள 'நெருப்பு வளையம்' (Ring of Fire) பகுதியில் கம்சட்கா தீபகற்பம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இப்பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் மெகா நிலநடுக்கத்தால் உருவான சுனாமி அலைகள், கடற்கரை கிராமத்தின் ஒரு பகுதியையே கடலுக்குள் இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.