×

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : அவதாருக்கு ஆஸ்கர் விருது..!!

 

98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது.

விருது வழங்கும் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.விருதுகளை பெற்ற படங்கள் விபரம் பின்வருமாறு:

* வெப்பன்ஸ் படத்தில் நடித்த ஏமி மேடிகனுக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது.

* தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்- சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது.

* 'அவதார் : பயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் சிறந்த 'VISUAL EFFECTS'க்கான ஆஸ்கர் விருதை வென்றது.* சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது: ஒன் பேட்டில் ஆப் அன்டர்ன்

* நார்வே நாட்டின் “செண்டிமென்டல் வால்யூ” திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

* பெஸ்ட் ஓரிஜினல் ஸ்கிரின்பிளேக்கான ஆஸ்கர் விருதை சின்னர்ஸ் திரைப்படம் தட்டி சென்றது. இயக்குநர் ரயான் கூக்ளர் விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த நடிகை
“ஹேம்னெட்'' படத்திற்காக ஜெஸ்ஸி பக்லிக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது
சிறந்த நடிகர்
சின்னர்ஸ் படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான ஆஸ்கர் விருதை மைக்கேல் பி. ஜோர்டான் வென்றார்.
6 ஆஸ்கர் விருதுகள்
சிறந்த படம், இயக்குநர், துணை நடிகர், படத்தொகுப்பு, சிறந்த நடிகர் தேர்வு, திரைக்கதை என மொத்தம் 6 ஆஸ்கர் விருதுகளை 'One Battle After Another' திரைப்படம் வென்று சாதனை படைத்தது.
3 ஆஸ்கர் விருதுகள்
ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஒப்பனை - சிகை அலங்காரம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை 'FRANKENSTEIN' திரைப்படம் தட்டி சென்றது.* சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் வென்றார். * சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை எப்1 திரைப்படம் வென்றது.
முதல் பெண்
சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் சின்னர்ஸ் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்று சாதனை; ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற சாதனையை ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் படைத்தார்.