"98400 91100" - இந்த ஒரு நம்பர் போதும்! – பெண்களுக்குப் பாதுகாப்பு முதல் சைபர் கிரைம் புகார் வரை..!
"Kovai Digi Cop" என்ற Whatsapp Chat Bot என்ற சேவை அறிமுகம் செய்துள்ளது கோவை மாவட்ட காவல்துறை.
98400 91100 என்ற எண் மூலம் Whatsapp ChatBot சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் புகார் , சைபர்கிரைம் புகார் , புகாரின் விசாரணை நிலைகள், அருகில் உள்ள காவல் நிலையங்கள், இரவு நேர ரோந்து காவலர்களின் விவரங்கள், போதை பொருள் பயன்பாடு குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்தல் புகார் அளித்தல், எமர்ஜென்சி சேவை எண்கள், வாகனங்களின் விவரங்கள், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து விளக்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்த ChatBot மூலம் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அவர்களுடைய சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கார்த்திகேயன் தெரிவித்தார். தற்பொழுது மாவட்ட காவல் துறை எல்லைகளில் மட்டும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் விரைவில் மாநகருக்கும் விரிவு படுத்த இருப்பதாக தெரிவித்த அவர், இதற்காகவே கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.