×

கொரோனாவின் பிடியிலிருந்து மீண்ட 95 வயதான சுதந்திர போராட்ட தியாகி!

கொரோனாவின் கோரப்பிடியில் கொரோனா சிக்கிக் கொண்டிருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதில் இளம் வயதினரும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 95 வயதான சுதந்திர போராட்ட தியாகி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் வி.கே.செல்லம் என்பவர், விடுதலை போரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் களம் கண்டு, பிரதமர்
 

கொரோனாவின் கோரப்பிடியில் கொரோனா சிக்கிக் கொண்டிருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதில் இளம் வயதினரும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 95 வயதான சுதந்திர போராட்ட தியாகி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் வி.கே.செல்லம் என்பவர், விடுதலை போரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் களம் கண்டு, பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார். 40 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வசித்து வரும் இவரது மகன் மாநகராட்சியில் பணிபுரிவதால் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவரின் மூலம் வி.கே.செல்லத்துக்கும் அவரது குடும்பத்தில் உள்ள 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர் கடந்த 5 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. உடல் வலிமையுடனும் மன உறுதியுடனும் இருந்த வி.கே.செல்லம் கொரோனாவில் இருந்து குணமடைந்ததால் அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் இறைச்சி, நாட்டுக்கோழி, மீன் உள்ளிட்டவற்றை உண்டு நலமாக இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார். உடல் ஆரோக்கியமாக, மன உறுதியுடன் இருந்தால் எந்த நோயில் இருந்து எந்த வயதினரும் மீண்டு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.