×

9 மாத குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்…வீட்டைப் பூட்டி விட்டு எஸ்கேப் ஆனதால் போலீசார் வலைவீச்சு!

குழந்தைகளைப் பணத்துக்காக பெற்றோர்களே விற்கும் கதைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வருகிறோம். குழந்தைகளைப் பணத்துக்காக பெற்றோர்களே விற்கும் கதைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வருகிறோம். குடும்ப வறுமையின் காரணமாகவும் பணத்தாசையின் காரணமாகவும் பெற்ற குழந்தையை விற்கும் கொடுமை தமிழகத்திலே தான் அதிகமாக நடக்கிறது. இதே போலக் கொடுமை புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பெரியகல்லுவயர் என்னும் பகுதியில் காடப்பன்- செல்வி என்னும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த
 

குழந்தைகளைப் பணத்துக்காக பெற்றோர்களே விற்கும் கதைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வருகிறோம்.

குழந்தைகளைப் பணத்துக்காக பெற்றோர்களே விற்கும் கதைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வருகிறோம். குடும்ப வறுமையின் காரணமாகவும் பணத்தாசையின் காரணமாகவும் பெற்ற குழந்தையை விற்கும் கொடுமை தமிழகத்திலே தான் அதிகமாக  நடக்கிறது. இதே போலக் கொடுமை புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பெரியகல்லுவயர் என்னும் பகுதியில் காடப்பன்- செல்வி என்னும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து 4 நாட்களிலேயே, குழந்தையை நம்மால் வளர்க்க முடியாது என்பதற்காக 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இது குறித்து சமீபத்தில் சைல்ட் ஹெல்ப் லைன் நம்பருக்கு புகார் வந்துள்ளது. உடனே அங்கிருந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதற்காக  காடப்பன்- செல்வி வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால், அதனை எப்படியோ அறிந்து கொண்ட அவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.

 

இதனால் அந்த தம்பதி குழந்தையை விற்றதை உறுதி செய்த அதிகாரிகள், திருமயம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில், அந்த குழந்தையை எதற்காக விற்றார்கள், யாருக்கு விற்றார்கள் என்று திருமயம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.