×

பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு மயக்கம்

 

நாமக்கல்லில்  பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது.  இங்கு பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே கடையில் சாப்பிட்ட 8  பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்படுகிறது.

பர்கர் சாப்பிட்ட 18 வயதில் இளைஞருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் பர்கர் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.