×

அதிர்ச்சி சம்பவம்! தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விஸ்வா என்ற மாணவன் கடந்த 7ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற தெரு நாய் ஒன்று விஸ்வாவை சரமாரியாக கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த விஸ்வாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நாய் கடித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் விஸ்வாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விஸ்வாவின் பெற்றோர் கதறி அழுதனர். தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.