தூத்துக்குடியில் காணாமல் போன 8ம் வகுப்பு மாணவர் மீட்பு
Updated: Nov 3, 2026, 21:16 IST
தூத்துக்குடியில் விடுதியில் இருந்து காணாமல் போன 8ம் வகுப்பு மாணவர், தெற்கு காவல் நிலைய போலீசாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
30.10.2026 அன்று, தூத்துக்குடி மாவட்டம், ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் தங்கி, 8-ஆம் வகுப்பு படித்து வந்த ஜீவா என்ற 13 வயது சிறுவன், படிப்பில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக விடுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உடனடியாக சிறுவன் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையினரின் துரிதமான மற்றும் சிறப்பான நடவடிக்கையின் காரணமாக, 02.11.2026 அன்று சிறுவன் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.