மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டி! நகைக் கடனுக்கு கிராமுக்கு ₹10,800! கும்பகோணம் ரெப்கோ வங்கியின் அதிரடி மெகா சலுகை!
தாயகம் திரும்பியோரின் மறுவாழ்விற்காக, இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது ரெப்கோ வங்கியாகும். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் 108 கிளைகளுடன், கடந்த 57 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி சிறந்த சேவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், கும்பகோணம் ரெப்கோ வங்கி கிளையில் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை, இந்திய தூதரகத்தின் ஓய்வுபெற்ற அரசு தூதர் திரு. சந்திரமௌலி அவர்கள் துவக்கி வைத்தார்.
கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ரெப்கோ வங்கியில், இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டியும், மற்றவர்களுக்கு 7.75% வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேமிப்பு முகாம் 10/06/2026 முதல் 31/07/2026 வரை மட்டுமே செயல்படும்.
மேலும் வங்கியில் அனைத்து வகையான தேவைகளுக்கும் சொத்தின் மிது அடமானக் கடன் மற்றும் நகைக் கடனுக்கு கிராமுக்கு அதிகபட்சமாக 10,800/- வரை துரிதமாகவும் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது என வங்கியின் உதவி பொது மேலாளர் திரு.விக்னேஷ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் வங்கியின் உதவி பொதுமேலாளா் விக்னேஷ் பேசியதாவது :
இந்தச் சிறப்பு சேமிப்பு திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டியும், மற்றவா்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஜூன் 10 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சிறுசேமிப்பு திட்ட முகாமை வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.