6 மணி நேரத்தில் 8 லட்சம் பேர் பதிவு- கூகுள் டிரெண்டிங்கில் அண்ணாமலை இயக்கம்
Jun 5, 2026, 20:24 IST
பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலை, இன்று புதிய இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்து அதில் இணையுமாறு அழைப்பும் விடுத்தார்.
இது நம்ம இயக்கம் என்ற அமைப்பின் இணைப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அண்ணாமலை. https://wetheleader.org/ என்ற இணையதளம் வாயிலாக தன்னார்வலர்களாக இணையுங்கள் என்றும் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலை்ில் ஆன்லைன் மூலமாக அண்ணாமலை இயக்கத்தில் 6 மணி நேரத்தில் 8 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். அண்ணாமலை அழைப்பு விடுத்த சுமார் 4 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்தது குறிப்பிடதக்கது.