☰
×

தமிழ்நாட்டில் இனி 8 மணிநேர மின் தடை?

 

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க,  பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின்தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க,  பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின்தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அரசு அலுவலகங்களில் தடை இன்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள மின்வாரியம், “மேற்கண்ட செய்தி குறிப்பில் உள்ள தகவல் முற்றிலும் தவறானது. தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்பு பணிகளுக்கான மின் நிறுத்தத்தை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நிர்ணயத்துள்ளது. இந்தக் கால அளவை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணியின் போது வேறு பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதை சரி செய்ய சிறிதளவு கால அவகாசம் கூடுதலாக எடுக்கப்பட்டது.  மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும்போது, முன்னதாகவே பாதிக்கப்படும் மின் நுகர்வோர்களுக்கு செய்தி குறிப்புகள், குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்னறிவிப்பு செய்த பின்பே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பகல் நேரங்களில் மின் தேவையை விட மின்  இருப்பு உபரியாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.