☰
×

ஒரே நாளில் 78 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.58,214 கோடி முதலீடு! தவெக அரசு சாதனை 

 

முதலமைச்சர் ஜோசப் விஜய் 25-11-2026 தலைமையில் கோவளம், தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்-வில் 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்று மாநாடு 2026 (VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026) நடைபெற்றது. 

முதலமைச்சர் ஜோசப் விஜய் 25-11-2026 தலைமையில் கோவளம், தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்-வில் 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்று மாநாடு 2026 (VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026) நடைபெற்றது.  இந்த 2-வது மாநாட்டில் மட்டும் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. ரூ.58,214 கோடி புதிய முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 65,786 புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப்படவுள்ளது.  மே 2026 முதல் கையெழுத்தான 112 MoU-க்களில் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு மாறிவிட்டன.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கிருஷ்ணகிரி முதல் தூத்துக்குடி வரை, கோவை முதல் ராமநாதபுரம் வரை, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலை, வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

78 நிறுவனங்களில் பெரிய முதலீடுகள்

-CSE Development India Pvt Ltd - RE துறை: ரூ.8,140 கோடி முதலீடு, 2,000 வேலை - விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், வேலூர், கரூர், தேனி என பல மாவட்டங்கள்
- JM Baxi Ports & Logistics Pvt Ltd - Logistics: ரூ.5,200 கோடி முதலீடு, 7,500 வேலை - பல மாவட்டங்கள்
- Avigna Private Limited - Industrial Park:ரூ.5,000 கோடி முதலீடு, 300 வேலை - கிருஷ்ணகிரி / செங்கல்பட்டு / சென்னை
- Greenbase Industrial & Logistics Park:ரூ.2,650 கோடி முதலீடு, 200 வேலை - செங்கல்பட்டு
-Sanmar Group - Shipbuilding: ரூ.1,950 கோடி முதலீடு, 950 வேலை - தூத்துக்குடி