பெரம்பூர் தொகுதியில் 752 புகார்கள்... நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
Jul 19, 2026, 17:53 IST
5 நாட்களுக்கு முன் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து புகார் கொடுக்க http://tvkcm.com/transparency என்ற இணையதள வசதியும் தொடங்கப்பட்டது.
5 நாட்களுக்கு முன் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து புகார் கொடுக்க http://tvkcm.com/transparency என்ற இணையதள வசதியும் தொடங்கப்பட்டது. இப்போது வரை மொத்தம் 752 புகார்கள் வந்துள்ளது. அதில் முதல்வரின் தொகுதியிலேயே 152 புகார்கள் மின்வெட்டு குறித்தும், 28 புகார்கள் தெருவிளக்கு குறித்தும், 22 புகார்கள் குப்பைகள் அகற்றுவது குறித்தும் உள்ளது. இதில் சாதாரண தெருவிளக்கு மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் குறித்த புகாருக்கு கூட எந்த நடவடிக்கையம் எடுத்ததாக அதில் தகவல் இல்லை. மொத்தம் பதிவான 752 புகாரின் மீதும் ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை.