×

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி!

செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் இணையதளத்தை நாடியதால் அந்த இணையதளம் சிறிது நேரம் முடங்கி பின் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 48.57 % சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 57.44% ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்கள்
 

செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் இணையதளத்தை நாடியதால் அந்த இணையதளம் சிறிது நேரம் முடங்கி பின் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 48.57 % சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 57.44% ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று 8வது இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேரும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில் 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளியில் படித்த 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.