×

ஒரே நாளில் ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்; சென்னை வாசிகளே… உஷார்!

சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.73,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, பாதிப்பு குறைந்திருப்பதால் பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். எனினும், மூன்றாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்
 

சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.73,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, பாதிப்பு குறைந்திருப்பதால் பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். எனினும், மூன்றாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி, சென்னையில் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றித்திரியும் நபர்களுக்கு சென்னை காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். காவல்துறை மட்டுமல்லாது ஊரடங்கு அமலாக்கக் குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் ரூ.73 ஆயிரத்துக்கு 300 அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

15 மண்டலங்களில் நடத்திய ஆய்வில் 73 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் அபராதம் வசூலானதாகவும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.