×

7 பயணிகளுடன் சென்ற மலை ரயில்… இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணத்தின் எதிரொலி!

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே இயக்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியில் இயற்கை எழில் மிகுந்து காணப்படுவதால் பல சுற்றுலாப் பயணிகள் இதில் பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். மேட்டுப் பாளையத்திலிருந்து நீலகிரிக்குக் காலை 7:10க்கும், மாலை 2 மணிக்கும் மலை ரயில் இயக்கப் பட்டு வருகிறது. இதில், பயணிகளின் வரத்து அதிகரிப்பதால் கடந்த சில
 

 மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே இயக்கப்பட்டு வருகின்றன.  

 மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த வழியில் இயற்கை எழில் மிகுந்து காணப்படுவதால் பல சுற்றுலாப் பயணிகள் இதில் பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். மேட்டுப் பாளையத்திலிருந்து நீலகிரிக்குக் காலை 7:10க்கும், மாலை 2 மணிக்கும் மலை ரயில் இயக்கப் பட்டு வருகிறது. இதில், பயணிகளின் வரத்து அதிகரிப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டணம் உயர்த்தப்பட்டது. 

அதாவது, முதல் வகுப்புக்கான கட்டணம் ரூ.470 இல் இருந்து ரூ.600க்கும், முன்பதிவு இல்லாத முதல் வகுப்பு பயண கட்டணம் ரூ.395இல் இருந்து ரூ.520க்கும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணக்கட்டணம் ரூ.145இல் இருந்து ரூ.295க்கும், முன்பதிவில்லா ரூ.75 இல் இருந்து ரூ.175க்கும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மலை ரயில்களால் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மலை ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு இரு மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணமே காரணம் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகள் குறைந்ததால் நேற்று முன்தினம் வெறும் 7 பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டுள்ளது.