கால் முறிவுக்காக சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி பரிதாப பலி
நாமக்கல் பரமத்திவேலூரில் கால் முறிவுக்காக சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கால்முறிவு இருக்கமாக கட்டு போட்டதால் வலி தாங்க முடியாமல் சிறுமி கவிஷ்கா துடிதுடித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் கால் முழுவதும் அழுகி சேதமானதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் கால் அகற்றப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மருத்துவமனையின் தவறான சிகிச்சையே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பின்னர் கால் அகற்றப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்ததால் மருத்துவரை கைது செய்து, மருத்துவமனைக்கு சீல் வைக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி கவிக்ஷாவின் உடலை சாலையில் கிடத்தி நாவல் தனியார் மருத்துவமனைக்கு எதிராக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.