×

மதுரையில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் இன்னும் கூட தொற்று பரவல் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் ஆரம்பத்தை காட்டிலும் தற்போது தொற்றின் வீரியம் குறைந்து காணப்படுகிறது. அதே சமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மழை அதிகளவு பெய்து வந்தது. இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவ
 

டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் இன்னும் கூட தொற்று பரவல் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் ஆரம்பத்தை காட்டிலும் தற்போது தொற்றின் வீரியம் குறைந்து காணப்படுகிறது. அதே சமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மழை அதிகளவு பெய்து வந்தது. இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பிருந்தது. இதனால் மக்கள் காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில் மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். மூன்று நாட்களாக டெங்கு காய்ச்சலால் சிறுவன் திருமலேஷ் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் திருமலேஷின் 9 வயது சகோதரனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.