×

“7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு” சு.வெங்கடேசன் வரவேற்பு!

தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளதற்கு மதுரை எம்.பி.யும் மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து வருகிறது. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள், முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டது. குறிப்பாக கொந்தகையில் மனித எலும்பு கூடும் கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளது என்று
 

தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளதற்கு மதுரை எம்.பி.யும் மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து வருகிறது. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள், முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டது. குறிப்பாக கொந்தகையில் மனித எலும்பு கூடும் கண்டெடுக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளது என்று தொல்லியல்துறை அறிவித்துள்ளது. கீழடி, அதிச்சநல்லூர் , சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடுதுறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொங்கல் பரிசானது தொல்லியல் துறைப் பணிகளை செய்தவர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக நிலப்பரப்பின் அனைத்து திசைகளிலும் ,மூன்று பெரும் வரலாற்றுக் காலங்களை ஆய்வுகளமாக அமைத்து ஒரே நேரத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு செய்வது இதுவே முதன் முறை. மகிழ்ந்து வரவேற்கிறேன். #தொல்லியல் #கீழடி #தமிழ் என்று பதிவிட்டுள்ளார்.