சென்னையில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் மரணம்- 7 பேர் படுகாயம்
சென்னை அடுத்த நாவலூரில் சிலிண்டர் வெடித்ததில் முழு கட்டிடம் இடிந்தது, இதில் 3 குடும்பத்தினர் வசித்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி என 2 குழந்தைகள் உயிரிழந்தனர். தாய், தந்தை, பாட்டி, அக்கம்- பக்கத்தினர் என 7 பேர் காயமடைந்தனர்.
சென்னை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரின் சொந்த வீடு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதில் மூன்று பேர் குடியிருந்து வருகிறார்கள். அதில் வைரமுத்து என்பவர் அங்குள்ள பிஜி ஹாஸ்டல் தனியார் தங்கியிருக்கும் நபர்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் பணி செய்கிறார். அவர் மனைவி செல்வி மற்றும் 7 வயது பிரதீப் உள்ளிரோடு ஒரு பகுதியில் வசித்தார். அதன் இரண்டாவது பகுதியில் சஞ்சீவ்குமார்- சோனியா இவர்களுடன், 4 வயது பெண் குழந்தை கிருத்திகா, ஒன்றரை வயது ஆண் குழந்தை தீரன் ஆகிய 5 பேர் வசித்தனர். அதனையடுத்து முருகன் என்பவர் மூன்றாவது பகுதியிலும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வைரமுத்து சமையல் செய்வதற்காக எழுந்தபோது, கசிவான சிலிண்டர் ஒன்று பலமாக வெடித்துள்ளது. இதில் அந்த வைரமுத்து இருந்த பகுதி உள்ளிட்ட மூன்று குடும்பங்கள் பகுதியும் முழுவதும் இடிந்து விழுந்தது. ஜன்னல்கள் கதவுகள் பக்கவாட்டு சுவர்கள் வெடித்து சிதறின. மூன்று குடியிருப்புகளும் சிதறிய நிலையில் அதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் அந்த வைரமுத்து, அவர் மனைவி செல்வி, பிரதீப் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சஞ்சீவ் குமார் சோனியா தம்பதியின் குழந்தைகள் நான்கு வயது மகள் கிருத்திகா, ஒன்றரை வயது ஆண் குழந்தை தீரன், ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சஞ்சீவ் குமார் சோனியா, சோனியாவின் தாயார் சித்ரா ஆகியோரும் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இடுப்பாடுகளில் உயிரோடு இருந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வைரமுத்து சட்டவிரோதமாக நாலு கமர்சியல் சிலிண்டரும் ஒரு டொமஸ்டிக் சிலிண்டரும் வீட்டில் பதுக்கி வைத்து இவர் அவர் சமையல் செய்து தொழிலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் மொத்தம் ஏழு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதில் முதல் கட்டமாக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று சில சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.