உத்தராகண்ட் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது: தொழிலாளர்கள் 7 பேர் பலி..!!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பிப்பல்கோட்டியில் தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம் சார்பில் சுரங்கப்பாதையில் 18 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது சுரங்கத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரின் வேகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் சிக்கிக் கொண்டு உள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.சுரங்கத்தில் சிக்கியவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தமி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாநில மற்றும் தேசிய பேரிடர் படையினர் சம்பவஇடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 2 பேரை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் மருத்துவர்களும், சுகாதாரத்துறை குழுவினரும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
பிபால்பட்டி சுரங்கப்பாதை விபத்து குறித்து, டேராடூனில் உள்ள பேரிடர் மீட்பு நடவடிக்கை மையத்தில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கினார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, இன்று சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது