×

தமிழகத்தில் புரெவி புயலுக்கு 7 பேர் பலி!

தமிழகத்தில் புறவி புயல் வலுவிழந்த நிலையிலும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அதேசமயம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூர் ,மன்னார்குடி, நாகை ,புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அத்துடன் புரெவி புயல் அச்சம் குறைந்தாலும் அரசு விதித்த தடை தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 7வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புரெவி புயலுக்கு நேற்று மாலை
 

தமிழகத்தில் புறவி புயல் வலுவிழந்த நிலையிலும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அதேசமயம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் திருவாரூர் ,மன்னார்குடி, நாகை ,புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அத்துடன் புரெவி புயல் அச்சம் குறைந்தாலும் அரசு விதித்த தடை தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 7வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் புரெவி புயலுக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,064 வீடுகள் சேதம் அடைந்த நிலையில் 44 ஆயிரத்து 716 ஏக்கர் நெல், வாழை சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.