தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொது மறுவாழ்வுத்துறை அரசு சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சி துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா அறி, டிட்கோ செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் பாலசுப்பிரமணியம், பொது, மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நலத் துறை இயக்குநராக ஷரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அரசு துணைச் செயலராக பானோத் ம்ருகேந்தர் லால் மாற்றப்பட்டுள்ளார்