×

ஒரே நாளில் 64 சதவீதம் குறைந்த வசூல்..! ’டாக்ஸிக்’ திரைப்படத்தின் 2ம் நாள் நிலவரம் என்ன?

 

டாக்ஸிக் திரைப்படம் ஓணம் பண்டிகை, மிலாடி நபி ஆகிய இரண்டு அரசு விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, கடந்த புதன்கிழமை திரையரங்குகளில் வெளியாகியது. நீண்ட விடுமுறை நாட்கள் கொண்ட வாரம் என்பதாலும், அப்போது பார்வையாளர்கள் அதிகளவு திரையரங்கிற்கு வருகை தரும் பட்சத்தில் வசூல் அதிகரிக்கும் என்பதாலும் வெளியிடப்பட்டது.

இந்த உத்தி பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பெரிய பண்டிகை காலங்களில் கடைபிடிக்கப்படுகிறது. நடிகர் அஜித்குமார் நடித்துள்ள 8 திரைப்படங்களும், விஜய் நடித்த 2 படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது. குறிப்பாக விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது.

’டாக்ஸிக்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ஷாருக்கான், ரன்பீர் கபூர் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.யாஷ் நடித்துள்ள ’டாக்ஸிக்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 101.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 'டாக்ஸிக்' திரைப்படம் இந்த வசூல் சாதனை மூலம், 'ஜவான்' திரைப்படம் முதல் நாள் வசூல் (75 கோடி ரூபாய்), கல்கி (95 கோடி ரூபாய்) சலார் (91 கோடி ரூபாய்) தேவரா (83 கோடி ரூபாய்) ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதே நேரத்தில் யாஷ் நடித்த திரைப்படம் ’துரந்தர் 2’ (103 கோடி ரூபாய்), புஷ்பா 2 (164.25 கோடி ரூபாய்) கேஜிஎஃப் 2 (116 கோடி ரூபாய்), பாகுபலி (121 கோடி ரூபாய்) ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க தவறியுள்ளது.

இந்நிலையில் டாக்ஸிக் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில், இந்தியாவில் 22,629 காட்சிகள் திரையிடப்பட்டு, 36.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் மொத்தமாக 137.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மொத்தமாக உலகளவில் வசூல் கணக்கு 164.50 கோடி ரூபாயாக உள்ளது. முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய டாக்ஸிக் திரைப்படம், இரண்டாம் நாளில் கூடுதலாக 64 கோடி ரூபாய் மட்டுமே வசூல் பெற்றுள்ளது. ஒரே நாளில் 64 சதவீதம் வசூல் குறைந்துள்ளது.