×

“60 ஆண்டுகால  அரசியல் வாழ்க்கையில்  பேராசிரியர் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான்” : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். திமுக பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு நடிகர்
 

முக ஸ்டாலின் உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

திமுக பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார். அவருக்கு வயது 98.

 

 

அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குநர்  எஸ்.பி. முத்துராமன் உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அன்பழகன் மறைவு பேரிழப்பு. 60 ஆண்டுகால  அரசியல் வாழ்க்கையில்  பேராசிரியர் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். 

 

முன்னதாக நடிகர் கமல் ஹாசன் க. அன்பழகன் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.