×

6 ஆயிரம் ரூபாய் கடன்: 6 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த குடும்பம்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 28 பேரை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர்: மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 28 பேரை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முருகன் என்பவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். இதையடுத்து கடனை திருப்பி செலுத்த முடியாத ராஜேந்திரனையும் அவரது குடும்பத்தினரையும் முருகன் மரம் வெட்டு தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த
 

மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 28 பேரை மாவட்ட நிர்வாகத்தினர்  மீட்டுள்ளனர். 

ஸ்ரீபெரும்புதூர்:  மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 28 பேரை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர். 

ஸ்ரீபெரும்புதூரை  சேர்ந்த முருகன் என்பவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். இதையடுத்து  கடனை திருப்பி செலுத்த முடியாத ராஜேந்திரனையும்  அவரது குடும்பத்தினரையும் முருகன் மரம் வெட்டு தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த குடும்பம் முருகனிடம் கொத்தடிமையாக இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி மாதம்  அங்கிருந்து தப்பித்து மகாபலிபுரம் அருகேயுள்ள உறவினர் வீட்டில் சென்றுள்ளார். ஆனால்  அவர்களைக் கண்டுபிடித்த முருகன் ராஜேந்திரன் குடும்பத்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அவர்களை மீட்டுள்ளனர்.

மேலும் முருகனிடம் வேலை பார்த்த  7 குடும்பங்களைச் சேர்ந்த 12 சிறுவர்கள் உட்பட 28 பேரை மாவட்ட நிர்வாகம் மீட்கப்பட்டுள்ளனர்.  மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

6 ஆயிரம் ரூபாய்க்காக 6 ஆண்டுகளாக ஒரு குடும்பமே கொத்தடிமையாக இருந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.