×

பலூன் தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

 

பலூன் தொண்டையில் சிக்கியதால் மூச்சித்திணறி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார்-சத்தியா தம்பதியினரின் 6 வயது சிறுவன் சோம்நாத். சிறுவன் பலூனை விழுங்கி உயிரிழந்தார். பெற்றோர் தொழிலை முடித்துவிட்டு  வீட்டுக்கு வந்தபோது, சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே சிறுவனை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுவனின் தொண்டையில் பலூன் சிக்கியிருந்தது தெரியவந்தது. தொண்டையில் பலூன் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.