×

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு : என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா
 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில்  5 வது முறையாக ஜூன் 30 வரை பொதுமுடக்கம்  நீடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் என்றும் பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள்:

  • மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு
  • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை
  • மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை
  • தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்
  • ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
  • வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு
  • ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு
  • கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்
  • வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
  • மறுஉத்தரவு வரும்வரை வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை விதிப்பு