×

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது - அ.ராசா

 

5ஜி அலைக்கற்றை ஏலத்தில்  மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது, இது தொடர்பாக  விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தகவல் தொலைத்தொடர்பு த்துறை அமைச்சர் அ.ராசா தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் நாடாளுமன்ற மக்களவையில் "வன விலங்கு திருத்த மசோதா" நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவின் படி புலிகள்,யானைகள் சரணாலயம் ( Reserve Forest ) அருகே 1 கிலோ மீட்டர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட இடங்களாக பாதுகாக்க வேண்டும் குறிப்பாக எந்த ஒரு திட்டனும் கொண்டுவர கூடாது என வழிமுறை வகுக்குமாறு நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். இதனால் உதகை உள்ளிட்ட மலை பிரதேசங்ககளில் வாழும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இது குறித்து மத்திய வனத்துறை அமைச்சரிடம் முறையிட்ட போது மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும், அதே நேரத்தில் நீதிமன்றத்தில் மனு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக அ.ராசா தெரிவித்தார். இது உதகை மட்டுமில்லாமல் அனைத்து மலைவாழ் மக்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்தை தெரிவிக்கும் போது, மாநில அரசுக்கு மத்திய அரசுக்கும் அல்லது அனைத்து மாநிலங்களுக்கும் ஒத்திசைவான பிராமண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரை கேட்டு கொண்டு உள்ளோம். 

30 மெகா ஹெட்ஸ் அலைகற்றையை ட்ரைய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைத்த போது 1.76 லட்சம் கோடி நஷ்டம் என வினோத் ராய் கூறினார். ஆனால் இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி என இந்த அரசு விசாரிக்க வேண்டும் இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் விசாரிக்க வேண்டும் என்றார். 

மத்திய அரசின் அமைச்சர் என்பதை மறந்து குறுகிய அரசியலில் நடந்து கொள்ளும் அமைச்சர்கள் மாநில கட்சிக்கும் மாநில அரசை குறிப்பிட்டு பேசுவது அவர்கள் எவ்வளவு கூறிய மனப்பான்மைக்குள் வந்து உள்ளார்கள் என புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

2ஜி,3ஜி,4ஜி ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை 5-6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய அமைச்சர் கூறினார், ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது எனவே விரிவான விசாரணை வேண்டும் என ஆ.ராசா வலியுறுத்தினார்.