×

ஒரே மாதத்தில் 54 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்..!

 

நாடு முழுவதும் இணையவழி மோசடி அதிகரித்து வருகிறது. நன்கு படித்தவர்கள் முதல் சாமான்ய மக்கள் வரை இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோத செயல்களும் நடக்கின்றன. இதற்கு பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி வருகிறது. மத்திய அரசின்அறிவுரை மற்றும் புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அந்த வகையில், மோசடி, போலி விளம்பரம் மற்றும் தவறாக பயன்படுத்தியதாக கடந்த ஏப்ரல் 1 முதல் 30 வரை மட்டும் இந்தியாவில் மட்டும் 54,70,958 வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன. இந்திய ஐடி சட்ட விதிகளின் இந்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் 13.5 லட்சம் கணக்குகள், யாரும் புகார் அளிப்பதற்கு முன்னரே , தானியங்கி கண்காணிப்பு மற்றும்கண்டறியும் அமைப்பு மூலம் முடக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கோடிக்கணக்கான வாட்ஸ் அப் பயனர்கள் உள்ள நிலையில் போலி விளம்பரங்கள், மோசடி முயற்சிள் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே இதனை சமாளிக்க வாட்ஸ் அப் நிறுவனம் தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி வருகிறது.

தானியங்கி அமைப்பை தாண்டியும், ஆயிரக்கணக்கானோர் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 19,189 பேர் புகார் அளித்தனர். அதில், விசாரணைக்கு பிறக 486 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.கணக்குகுள் தடை செய்ய 9,421 கோரிக்கைகள் வந்தன. பொதுவான விஷயத்துக்காக 9,103 மனுக்கள் வந்தன எனத் தெரிவித்துள்ளது.