அடுத்த 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்! ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
நாடு முழுவதும் அடுத்த 25 நாட்களில் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரை இந்தியாவில் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் ரூ.7.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என்றும் வணிகர்கள் கூட்டமைப்பான CAIT கணித்துள்ளது. நகை, ஆடை, உணவு, அலங்காரம் உள்ளிட்ட துறைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகை விற்பனை மூலம் ரூ.1.2 லட்சம் கோடியும், ஆடை விற்பனை மூலம் ரூ.90 ஆயிரம் கோடியும் வர்த்தகம் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், மண்டபங்கல் மூலம் ரூ.60 ஆயிரம் கோடியும், பரிசுகள், திருமண பொருட்கள், மாளிகை மூலம் கிடைத்த வருவாய் ரூ.37 , 500 கோடி, அலங்காரம், நிகழ்வு மேலாண்மை மூலம் கிடைத்த வருவாய் ரூ.37 , 500 கோடி. உலர் பழங்கள், இனிப்புகள், வீட்டு உபயோக பொருட்கள் மூலம் ரூ.30 ஆயிரம் லட்சம் கோடியும், போக்குவரத்து, இசை, பொழுதுபோக்கு ரூ.30 ஆயிரம் லட்சம் கோடியும், புகைப்படம், காணொலி பதிவு, அழகு நிலையங்கள் ரூ.22, 500 கோடியும் கிடைக்க பெற்றுள்ளது. மேலும், இந்தத் திருமண சீசன் மூலம் சுமார் 1.25 கோடி பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக CAIT தெரிவித்துள்ளது.