தவெக கூட்டத்தில் காயமடைந்த 51 பேர் வீடு திரும்பினர்- மாவட்ட ஆட்சியர்
கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 40 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறியுள்ளார். மீதமுள்ள 59 பேரில் 51 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பே மூன்று தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் உள்ளனர்.