கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு ராஜ அலங்காரம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தன காப்பு ராஜா அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் உள்ள சிலை ஆசிய கண்டத்திலேயே என்பது 190 டன் எடை கொண்ட ஒற்றைக் கல்லால் ஆனால் சிலையாகும். இதன் உயரம் 19 அடி அகலம் 10 அடி ஆகும்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்குள்ள விநாயகருக்கு 50 கிலோ சந்தனம், இரண்டு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மயில் தோகை போன்ற மாலை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
அதிகாலையிலேயே பல்வேறு சிறப்பு பூஜைகள் யாகங்கள் செய்யப்பட்டு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இனிப்புகள் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களும் தொடர்ச்சியாக வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதே போல் திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் கோயிலில் அமைந்துள்ள ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் ஆன 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகரை சுற்றி 5 டன் வண்ண பூக்களால் அலங்காரம் ஏராளமான பக்தர்கள் வரிசையாக நின்று Selfie எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.இங்கு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 14.09.26 மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் என 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகர் சிலைக்கும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகர் சிலைக்கும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயில் முழுவதும் 5 டன் வண்ணப் பூக்களை கொண்டு மக்களை கவரும் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விநாயகர் முன்பு செய்யப்பட்டுள்ள பூக்கள் அலங்காரத்தை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் தரிசனம் செய்தனர்.