“எங்க குடும்பத்துக்காக மார்டின் சார் நிறைய செஞ்சிருக்காங்க..”- ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மார்டின் குழுமம்
மார்டின் குழுமங்களின் தலைவரும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் தந்தையுமான சாண்டியாகோ மார்டின் வணிக உலகிற்கு வந்து 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டி, பாராட்டு விழா நடைபெற்றது.
மார்டின் குழுமங்களின் தலைவரும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் தந்தையுமான சாண்டியாகோ மார்டின் வணிக உலகிற்கு வந்து 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டி, பாராட்டு விழா நடைபெற்றது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மார்டின் குழுமங்களின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மார்டின் குழுமங்களில் 25ஆண்டுகளுக்கும் மேல், பணியாற்றிய 50 பணியாளர்களுக்குத் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கபட்டது.
மார்டின் குழுமங்களின் தலைவரும் எனது தந்தையுமான திரு.சாண்டியாகோ மார்டின் அவர்கள், வணிக உலகிற்கு வந்து 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டி, பாராட்டு விழாவும், மார்டின் குழுமங்களில் 25ஆண்டுகளுக்கும் மேல், பணியாற்றிய 50 பணியாளர்களுக்குத் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை
— Jose Charles Martin (@sscharles) July 26, 2026
வழங்கும் விழாவும்… pic.twitter.com/KkL9MzrB48
இவ்விழா பற்றி பரிசுத்தொகையான ரூ.30 லட்சத்துக்கான காசோலையைப் பெற்ற மார்டின் குழுமப் பணியாளர்கள் கூறுகையில், உண்மையான உழைப்பு... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைப்பு அனைத்து மனிதர்களும் முன்னுக்கு வரலாம் என்ற தத்துவத்தை மார்டின் சார் கற்று தந்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தாரோ அதுபோலவே இன்றும் மார்டின் சார் இருப்பதாகவும், எங்களை மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினரையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக்கொள்வதாகவும் மார்டின் குழும பணியாளர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். எவ்வளவு தவறு செய்தாலும், திட்டாமல் திறமையை ஊக்குவித்ததால்தான் 30 வருடமாக மார்டின் சாருடன் பயணிக்க முடிந்ததாகவும் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.