×

ரூ.20 கோடியில்... கட்டுமான தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

 

காலையில் பணிக்கு செல்லும் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருக்கும் இடங்களில் 20 கோடியில் 50 வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், காலையில் பணிக்கு செல்லும் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருக்கும் இடங்களில் வசதி மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, காலையில் பணிக்கு செல்லும் கட்டுமான தொழிலாளர்கள் மொத்தமாக காத்திருக்கும் இடங்களில் 20 கோடி செலவில் 50 இடங்களில் வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் இந்த வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 

இதைத்தவிர்த்து, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும், பராமரிப்பும் இல்லாமல் சிரமப்படும் கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் இரண்டு முதியோர் இல்லங்கள் தொடங்கவும் 66 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.