×

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு..

 

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த  பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள்  ஐடி விங் நிர்வாகி பிரசாத்,  நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர்.  இதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வாங்கியதாக  பிரதீப் வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் கிருஷ்ணாவை தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில் அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது.  அவர் கேரளாவில் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், சைபர் கிரைம் மூலம் அவரின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். மேலும் அவரை கைது செய்து பிடித்து வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.