×

#BREAKING விஜய்யை பார்க்க வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

 

விஜய்யை வரவேற்க சென்று கூட்டத்தில் சிக்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற  தொகுதிகளில்  போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைக்காக கோவைக்கு சிறப்பு விமானத்தில் வந்தார். அங்கிருந்து பிரச்சார வாகனம் மூலம் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி- கணியூர் சுங்கச்சாவடியில். சாலையோரம் நின்று கொண்டிருந்த தொண்டர்கள் சாலையில் உள்ளே போகாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டோல்கேட் அருகே விஜய் வந்தபோது போலீசாரின் தடுப்பை தாண்டி விஜயின் பிரச்சார வாகனத்தை நோக்கி ரசிகர்கள் தடுப்பை தாண்டி ஓடத் தொடங்கினர். இதனால் போலீசார் ஒன்றும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதில் கணியூர் பகுதியில் இருக்கும் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் டோல்கேட் மூடப்பட்டது.

இவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ், கார் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் கணியூர் டோல்கேட்டை கடக்க முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நின்றது. இந்நிலையில் விஜயை பார்க்க முந்தி அடித்துக்கொண்டு ரசிகர்கள் வாகனத்தின் பின் தொடர்ந்து செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டு ஒவ்வொருவரின் காலணிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். மேலும் விஜய்க்கு வரவேற்பு அளிக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லாமல் பல்வேறு இடங்களில் நின்று வரவேற்பை ஏற்றுச் சென்றதால் பின் தொடர்ந்த வாகனங்கள் தொடர்ந்து காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் சிக்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பரிபோனது. இதனால் அந்த பெண் பரிதாபமாக அழுது சென்று போலீசாரிடம் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.