×

5 ரூபாய் மருத்துவர் மறைவு : முதல்வர், துணை முதல்வர் இரங்கல்!

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார் . இவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம்
 

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார் . இவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் வீரராகவன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை மருத்துவ சேவை வழங்கியுள்ளார். மருத்துவரை இழந்து வாடும் குடும்பத்தார் வியாசர்பாடி எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி!” கூறியுள்ளார்.