×

இடி மின்னலுடன் கனமழை… மின்னல் தாக்கி 5 பேர் பரிதாப மரணம்!

தமிழகத்தில் கோடைக்கால கத்திரி வெயில் மே மாதமே முடிந்துவிட்டது. எனினும், வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூர், ராமநாதபுரம், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 

தமிழகத்தில் கோடைக்கால கத்திரி வெயில் மே மாதமே முடிந்துவிட்டது. எனினும், வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூர், ராமநாதபுரம், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தொடர் கனமழையால் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் நல்லி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கோவிலுக்கு சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அதே போல, சிவகங்கையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரும் ராமநாதபுரத்தில் வயலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.