தனிஷ்க் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யபத்துள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையில் உள்ள தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் 2026 நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு (நவம்பர் 12 அதிகாலை) நடைபெற்றது. கடை பூட்டப்பட்ட பிறகு, நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்தக் கொள்ளை அரங்கேறியுள்ளது. மறுநாள் (நவம்பர் 12) காலை ஊழியர்கள் கடையைத் திறந்தபோதுதான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த குற்றத்தை நிஷாந்த் என்ற குற்றவாளி செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மீனாட்சி ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், டெக் பாஸ் (Tech Boss) என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தவர். மேலும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு
— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 15, 2026
மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு… pic.twitter.com/ghU9A8SRGJ
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தனது எக்ஸ் தளத்தில், "மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு
மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன." என தெரிவித்துள்ளனர்.