×

அரசு பள்ளி மேற்கூரை பூச்சு விழுந்து 5 குழந்தைகள் காயம்

 

மதுராந்தகம் அரசுப் பள்ளியின் மேற்கூரைவிழுந்ததில் ஐந்து மாணவ மாணவியர்களுக்கு காயம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேல் கூரை இடிந்து வகுப்பறையில் உள்ள மாணவ, மாணவிகள் மீது விழுந்துள்ளது. இதில் பள்ளியில் பயின்ற ஐந்து மாணவ மாணவிகள் காயங்கள் ஏற்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மதுராந்தக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ. 33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் ஆறாம் வகுப்பை சேர்ந்த ரஷித், கோபிகா, தேன் மொழி, கோகுல், வைசாலி ஆகியோர் காயமடைந்தனர்.