×

48 ஆண்டுகள் பாடும் கமல்ஹாசனுக்கு இசைக்கலைஞர்கள் சங்கத்தின் கவுரவ உறுப்பினர் அட்டை

தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், கமல்ஹாசனுக்கு இன்று கவுரவ அடையாள உறுப்பினர் அட்டை வழங்கி கவுரவித்தது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், கதாசிரியர், கவிஞர், இயக்குநர் என்று பன்முகம் கொண்டவர் கமல்ஹாசன். இதில் பாடகர் கமல்ஹாசனுக்காக இசைக்கலைஞர்கள் சங்கம் இந்த அடையாள அட்டையை அவருக்கு வழங்கியிருக்கிறது. பன்னீர் புஷ்பங்களே, நினைவோ ஒரு பறவை, உன்னை விட, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி, கண்மணி அன்போட காதலன், தென்பாண்டி சீமையிலே என்று திரை இசைத் துறையில்
 

தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், கமல்ஹாசனுக்கு இன்று கவுரவ அடையாள உறுப்பினர் அட்டை வழங்கி கவுரவித்தது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், கதாசிரியர், கவிஞர், இயக்குநர் என்று பன்முகம் கொண்டவர் கமல்ஹாசன். இதில் பாடகர் கமல்ஹாசனுக்காக இசைக்கலைஞர்கள் சங்கம் இந்த அடையாள அட்டையை அவருக்கு வழங்கியிருக்கிறது.

பன்னீர் புஷ்பங்களே, நினைவோ ஒரு பறவை, உன்னை விட, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி, கண்மணி அன்போட காதலன், தென்பாண்டி சீமையிலே என்று திரை இசைத் துறையில் 48 ஆண்டு காலம் பல பாடல்களைப் பாடி மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள உலகநாயகன் பத்ம பூஷன் கமல் ஹாசனுக்கு திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, பொதுச்செயலாளர் ஜோனா பக்தகுமார், சேர்மன் எஸ். ஏ. ராஜ்குமார் இணைந்து, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் கவுரவ உறுப்பினர் அடையாள அட்டையை இன்று கமல்ஹாசன் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்கள்.

சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் உலகநாயகன் இணைந்தது சங்கத்திற்கும் இசைக்கலைஞர்களுக்கும் திரைப்படத் துறைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா பெருமையுடன் கூறியிருக்கிறார்.