×

48 நாட்கள் ஜாலி...விடுமுறை..! - ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை..!

 

ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் எக்கச்சக்க விடுமுறைகள் கிடைத்தது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்களும், ஜனவரி 26 குடியரசு தினத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. மொத்தமாக 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை கிடைத்தால் குஷியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் விடுமுறை குறித்து பார்ப்போம். அதாவது ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 1 கணக்குகளை முடிக்கும் பணிக்காக பல வங்கிகள் செயல்படாது. ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை புனித வௌ்ளி, ஏப்ரல் 14 செவ்வாய் கிழமை டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு மற்றும் வார விடுமுறைகள் வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்ற நிலையில் 10ம் வகுப்பு தேர்வு வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 16ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடித்து ஏப்ரல் 17 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மொத்தம் கோடை விடுமுறை 48 நாட்கள் வருகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதிநாள் வரை பணிக்கு வர அறிவுறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி கோடை விடுமுறை கிடைப்பதால் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.