#BREAKING கடந்த 24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், சென்னை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ரவுடிகள் தேடுதல் வேட்டையில் தமிழ்நாடு காவல்துறை களமிறங்கியது. 16 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 36 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 6,540 ரவுடிகளுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகள் குறித்த ஆய்வின் போது 303 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு
சரியாக இருக்கவேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிரடி நடவடிக்கையில் காவல்துறை களமிறங்கியுள்ளது.