சென்னையில் இன்று முதல் 45 நாட்களுக்கு 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
இன்று முதல் 45 நாட்களுக்கு ரயில்கள் ரத்து ஒரு மாதம் ரயிலில் பயணம் மேற்கொள்ள பணம் கொடுத்து மாதாந்திர பாஸ் வாங்கிள்ள ரயில் பயணிகளுக்கு பணத்தை திருப்பி வழங்க வேண்டும்
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள், 2026 பிப்ரவரி 20 நள்ளிரவு 00:00 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரை
தாம்பரம்/செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம்: பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை, அனைத்து மின்சார (EMU) ரயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையில்" (விரைவுப் பாதை) இயக்கப்படும்.
அரக்கோணம்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/தாம்பரம் சென்னை கடற்கரை: மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையில்" (விரைவுப் பாதை) இயக்கப்படும்.
ரயில் எண்கள் & நேர மாற்றம்: இந்தக் காலகட்டத்தில் (2026 பிப்ரவரி 20 முதல் ஏப்ரல்
5 வரை), சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு A-வில் (Annexure - A) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. பேருந்தில் பயணம் செய்தால் சரியான நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியவில்லை போக்குவரத்து நெரிசல் கூடுதல் நேரம் கூடுதல் பணம் செலவாகின்றதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் தெற்கு ரயில்வே திடீரென ரயில்கள் ரத்து என அறிவித்துள்ளது பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல் வேலைக்கு செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது ரயில்கள் தாமதமாக வந்தால் கூட பரவா இல்லை ரத்து என தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று முதல் 45 நாட்களுக்கு இதே நிலைமை என்தால் ஒரு மாதம் ரயிலில் பயணம் மேற்கொள்ள பணம் கொடுத்து மாதாந்திர பாஸ் வாங்கிள்ள ரயில் பயணிகளுக்கு பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.