திமுக ஆட்சியில் சோலார் ஊழல்! திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார்
திமுக ஆட்சியின் ஊழல் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சோலார் சங்கத் தலைவர் சி. நரசிம்மன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டங்கள் ஊழலால் பாதிக்கப்பட்டதாக இந்திய சோலார் சங்கத் தலைவர் சி. நரசிம்மன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் மட்டும் 1,750 மெகாவாட் சோலார் திட்டத்திற்கான துணை மின் நிலையம் திமுக அமைச்சர்களால் விற்கப்பட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற புகார்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக அரசு ஆட்சிக்கு வந்ததும், திட்டங்களை நிறுத்தி வைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சூரிய மின்சாரத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.