×

400 ஆண்டுகால வரலாறு- சாதிப்பாரா CM விஜய்

 

ஜெயலலிதா, கலைஞர் ஆட்சி காலங்களில் நிறைவேறாத புதிய தலைமைச் செயலகம் தவெக ஆட்சியில் ஈடேறுமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


சென்னையில் உள்ள தலைமை செயலகம் கிழக்கிந்திய கம்பெனியால் 1640-1644 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 1652க்கு பின்னர் பிரிட்டிஷ் அரசில் அதிகாரப்பூர்வ தலைமையிடமாக திகழ்ந்தது. சுமார் 400 ஆண்டுகளாக நிர்வாக மையமாக திகழ்ந்து வருகிறது. 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 4 ஏக்கர் மட்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய கட்டுப்பாடு & தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசால் விரிவுபடுத்த முடியாத நிலை இதுவரை நிலவுகிறது. 

இந்த சூழலில் தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றத்தை ரூ.1,200 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடுகிறார் முதல்வர் விஜய். 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், தோராயமாக 45 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமைச் செயலக வளாகம். அனைத்து வசதிகளுடன் திறன் மிக்க நிர்வாகத்தை உறுதி செய்ய இந்த ஆட்சியில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம். ஜெயலலிதா, கலைஞர் ஆட்சி காலங்களில் நிறைவேறாத புதிய தலைமைச் செயலகம், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் ஈடேறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.